பொதுநலப் பெருந்தகை

உழைத்தால் ஊதியம் கிடையாது, தங்களின் பொன்னான காலத்திற்கு ஈடு  கிடையாது. தங்கள் சேவைக்குப் பொன்னாடை பரிசு போன்ற எவ்வித அங்கீகாரமும் கிடையாது. இருப்பினும் தங்கள் சேவையைத் தொடர்ந்து செய்பவர்களை நாம் அடையாளம் கண்டு பாராட்ட வேண்டாமா? இதோ அவர்களுக்காகவே ஒரு விருது.

தகுதிகள்:

  • தன்னலம் மறந்த தகைமையே நின் தகுதி.
  • பொதுச் செயல்களில் தொடர்ந்து தம்மை ஈடுபடுத்திக் கொள்வோர்.
  • கத்தாரில் வீட்டு வேலை மற்றும் பணியில் எதேனும் சிக்கலில் தவிப்போரைப் பத்திரமாகத் தன் சொந்த ஊருக்கு அனுப்பும் சேவைகளைச் செய்வோர்.
  • இறந்தவர்களின் உடல்களைத் தாயகத்தில் அவர்தம் உறவுகளிடம் ஒப்படைத்தல் அல்லது கத்தாரிலேயே நல்லடக்கம் செய்யும் பெரும் சேவையைச் செய்வோர்.
  • தன்னால் இயன்ற அளவு இச்சமூகத்திற்குப் பொருள் உதவி செய்வோர்
  • சேவைகள், அமைப்பு சார்ந்து இருப்பின் அவ்வமைப்பு தம் குழுவிலிருந்து ஒருவரை விருதுக்குப் பரிந்துரைக்கலாம்.