“இல்லால் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை” என்று சொல்லுமளவிற்கு இல்லத்தரசிகள் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் ஆற்றும் பணிகளும், பங்களிப்பும் அளப்பரியது.
பெரும்பாலும் இவை கவனிக்கப்படுவது இல்லை என்பதே கசப்பான உண்மை. தன் குடும்பத்தைக் காத்துக்கொண்டும், சமூக நலன் மீதும் அக்கறையோடு பயணிக்கும் இல்லத்தரசிகளை இனிதே கௌரவிக்கவே இவ்விருது வழங்கப்படுகிறது.
தகுதிகள்:
- இல்லத்தரசிகளாக இருந்துகொண்டே கலை, இலக்கியம், சமூகசேவை மற்றும் வணிகம் போன்ற பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்தல்.
- தற்சார்பு தொழில் முனைவோராகவும் இருக்கலாம்.
- பணிக்குச் செல்லாப் பெண்கள்.