நம்பிக்கைச் சுடர்

இவ்வுலகம் நமக்கானது மட்டுமல்ல. நாளைய தலைமுறைக்குமானது. இன்றைய மாணவர்கள் தான் நம் நாளைய நம்பிக்கை. அந்த எதிர்கால இந்தியாவின் திறனைப் போற்றுவதும், புகழ்வதும், ஊக்குவிப்பதும் நம் தலையாயக் கடமையாகும். “ஊக்குவிப்பான் ஊக்கவித்தால் ஊக்குவிப்பானும் தேக்குவிப்பான்” என்ற கவிஞர் வாலியின் கூற்றிற்கேற்ப நாங்கள் செய்யும் சிறு முயற்சியே இந்த விருதாகும்.

தகுதிகள்:

  • 20 வயதிற்குள் இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் இணைக்க வேண்டும்.
  • கலை, தனித்திறன், தலைமைப்பண்பு, விளையாட்டு, தொழில்நுட்பம், அறிவியல், இலக்கியம், ஒவியம், நடிப்பு, படைப்பாக்கம், கணிதம் ஏதாவது ஒரு துறையில் முத்திரை பதித்திருத்தல் வேண்டும்.
  • அவர்தம் பள்ளிகளிலோ அல்லது பள்ளிகளுக்குள் அல்லது கல்லூரிகளுக்குள் இடையேயான போட்டிகளிலோ கலந்து கொண்டு குறைந்தபட்சம் 3 அல்லது அதற்கு மேலான வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
  • பன்னாட்டு அளவிலான போட்டியாக இருப்பின், ஒன்றிற்கும் மேற்பட்ட பங்கேற்பும், குறைந்தது ஒருமுறையேனும் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும்.
  • ஏதேனும் புதிய கண்டுபிடிப்புகள் செய்திருப்பின் அதற்கான அமைப்பு சார்ந்த பாராட்டுச் சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
  • மேற்கூறிய விதிமுறைகளுக்குள் பொருந்தாது இருப்பினும், இவ்விருதினைப் பெறத் தங்களுக்குத் தகுதியும் திறனும் உண்டென்று எண்ணுவோர் அதற்கான புகைப்படங்களையும் சான்றிதழ்களையும் இணைத்தும் விண்ணப்பிக்கலாம்.